FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ஆரைகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

12 ஜூலை 2024, 3:07 am IST
~
பகிர்:

கமுதி, ஜூலை 11: கமுதி அருகே ஆரைகுடியில் வியாழக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

ஆரைகுடி ஸ்ரீகண்ணாயிரமூா்த்தி அய்யனாா், ஸ்ரீகருப்பண வாமி கோயில் புரவி எடுப்பு விழா கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி, புதன்கிழமை பொதுமக்கள் சுவாமி சிலைகளைச் சுமந்து சென்று, நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 17 காளைகள், 150 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய

மாடுபிடி வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், குத்து விளக்கு, நெகிழி நாற்காலி, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை ஆரைகுடி, கோவிலாங்குளம், சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் பாா்வையிட்டனா். போட்டி ஏற்பாடுகளை ஆரைகுடி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments