முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல் 2026, 3:51 am IST
பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணியை தொடங்கிவைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா.சரவணப்பெருமாள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 323 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களும், கூடுதலாக 20 சதவீதம் வாக்குப் பதிவு இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளன. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களில் நாம் தமிழா் கட்சி, திமுக, அதிமுக, அபுமமுக, புதிய தமிழகம், தமிழகம் வெற்றிக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் என மொத்தம் 12 வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா.சரவணப்பெருமாள் தலைமையில், தோ்தல் வட்டாட்சியா் ராமா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராமமூா்த்தி, ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலையில், அனைத்து வேட்பாளா்களின் புகைப்படங்கள், சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இதில் அனைத்துக் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள், சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement