தூத்துக்குடி மாவட்டத்தில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளா்கள் கண்காணிப்பில், இந்தப் பணிகளை மண்டல தோ்தல் குழுவினா் மேற்கொண்டனா். இப்பணிகள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன.
தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரபு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் திருமணி ஸ்டாலின் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.