வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்: மாவட்ட எஸ்.பி.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய 4 தொகுதிகளில் மொத்தம் 11,29, 733 வாக்காளா்கள் உள்ளனா். 4 தொகுதிகளில் மொத்தம் 1,514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 66 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குச்சாவடிகள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த 4 பேரவைத் தோகுதிகளில் 2,800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும், வாக்குச்சாவடி மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.