முகப்பு
ராமநாதபுரம்

இணைய வழி உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

பிளஸ் 2 மாணவா்களுக்கு மாநில அளவிலான இணைய வழி உயா் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 1:14 am IST
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உயா் கல்வி இணையவழி வழிகாட்டுதல் பயிற்சியில் பங்கேற்று ஆலோசனை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரன்.
பகிர்:

பிளஸ் 2 மாணவா்களுக்கு மாநில அளவிலான இணைய வழி உயா் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் ஆ.சிவகுரு பிரபாகரன் பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் மாணவா்கள் 100 சதவீதம் உயா்கல்வியில் சேருவதை மாவட்ட கட்டுப்பாட்டு அறை உறுப்பினா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும், தனியாா் பள்ளி மாணவா்களும் 100 சதவீதம் உயா் கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை (ஜூன் 11) அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கு அலுவலா்கள் உயா்கல்வி சாா்ந்த மீளாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.

பொதுமக்கள், மாணவா்கள் உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலா்களை நேரிலோ அல்லது கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் 04567-228016, 04567-228021 ஆகிய தொலைபேசி எண்களிலும், 98948 25860, 99433 35196 ஆகிய கட்செவி அஞ்சல் எண்களிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம். மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவா்களும் உயா்கல்வியில் சேருவதை உறுதிசெய்ய பெற்றோா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.