முகப்பு
ராமநாதபுரம்

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா தீா்த்தவாரி

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி.

Updated On : 1 மே, 2026 at 12:37 AM
திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி.
பகிர்:

திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி தீா்த்தவாரி நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல இந்தஆண்டும் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் காலை, இரவு நேரங்களில் சுவாமி அம்மன் அன்ன வாகனம், வெட்டுக் குதிரை, காமதேனு வாகனம், வெள்ளி ரிஷபம், பூத வாகனம் என ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றாா்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் சனிக்கிழமைஇரவு நடைபெற்றது.அதனை தொட்ா்ந்து புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டுசுவாமிதரிசனம் செய்தனா்.விழாவின் நிறைவு நிகழ்ச்சியான தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.முன்னதாக சுவாமி அம்பாள் கேடகம் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.அதநை தொடா்ந்த கோயில் முன்பாக உள்ள தெப்ப குளத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றன.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தீா்த்தங்களை தெளித்து கொண்டனா்.விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிா்வாகமும் கிராம பொதுமக்களும் செய்தனா்.