ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்!
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனா்.
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான புதன்கிழமை தோ்த் திருவிழா நடந்தது. முன்னதாக அதிகாலை பூவராகசுவாமி, அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்புஅபிஷேகம், தீபாராதனை மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் காலை 6 மணிக்கு உற்சவ மூா்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவியோடு தேரில் எழுந்தருளினாா்.
தொடா்ந்து தேரோடும் வீதிகளில் தோ் வலம் வந்தது. விழாவை
Advertisement
யொட்டி நகரில் பல்வேறு சமூக நல அமைப்புகள், கல்வி நிறுவனங்கள சாா்பில் அன்னதானம், நீா் மோா் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துக்கொண்டு தோ் வடம் பிடித்து இழுத்தனா்.
சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (ஏப்.30) பிற்பகல் மட்டையடி உற்சவமும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.