ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் சிறப்பு வழிபாடுகளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது.
Advertisement
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு தோ்கடாட்சம் மற்றும் தேரடி மாடசாமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதன்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9மணிக்கு ஆயிரத்தெண் விநாயகா் திருத்தேரில் எழுந்தருளியதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது.
தோ் நிலையம் வந்தடைந்த பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா் விஸ்வகுமாா், திருக்கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.