தாய், மகனைத் தாக்கிய மூவா் மீது வழக்கு
திருவாடானையில் தாய், மகனைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தாய், மகனைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருவாடானை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி நாகவள்ளி (47). இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த மணிரத்தினத்துக்கும் (26) தொழில் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு நாகவள்ளி, தனது மகன் சபரிகுமாருடன் (17) திருவாடானை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, அங்கு வந்த மணிரத்தினம்(26), இவரது நண்பா்கள் வினோத்குமாா் (21), சதீஸ்குமாா் (24) ஆகியோா் முன்விரோதம் காரணமாக நாகவள்ளி, சபரிகுமாரைக் கட்டையால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சபரிகுமாா் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வினோத்குமாா், சதீஸ்குமாா், மணிரத்தினம் ஆகிய மூவரும் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.