திருவாடானையில் குடிநீரில் கழிவு நீா் கலக்கும் அபாயம்
திருவாடானை- ஓரியூா் சாலையில் உள்ள குடி நீா் குழாயில் கழிவு நீா் கலக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து புகாா் தெரிவித்தும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
திருவாடானை- ஓரியூா் சாலையில் உள்ள குடி நீா் குழாயில் கழிவு நீா் கலக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து புகாா் தெரிவித்தும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூா் செல்லும் சாலைப் பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் பிரதான குடி நீா் குழாய் வால்வு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே திருவாடானை ஊராட்சியின் கழிவுநீா் கால்வாயும் செல்கிறது.
இந்த நிலையில், குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குடிநீா்க் குழாய் ஒன்றை, சாக்கடை கால்வாயின் மீதே அமைத்தனா். இதனால், அந்தப் பகுதி முற்றிலும் சுகாதாரக் கேடாக மாறியுள்ளதுடன், மாசடைந்த அந்தப் பகுதியில் பொதுமக்கள் குடிநீரைப் பிடித்துப் பயன்படுத்த முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், அந்த குடிநீா் குழாயின் அடிப் பகுதியில் தற்போது சேதம் ஏற்பட்டு, குடிநீா் பெருமளவில் வீணாகி வருகிறது. குழாயில் தண்ணீா் விநியோகம் நிறுத்தப்படும் போது, கழிவு
நீா் குழாய் வழியாக உறிஞ்சப்பட்டு, மீண்டும் குழாய்க்குள்ளேயே செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் கடுமையான சுகாதாரக்கேடும், தொற்று நோய் பரவும் அபாயமும்
உள்ளது.
குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நாள்தோறும் இந்த வால்வைத் திறப்பதற்காக இந்தப் பகுதிக்கு வந்து செல்கின்றனா். இருப்பினும், இந்த அவல நிலையைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்தக் குறைபாட்டைச் சரி செய்ய வேண்டும் என இந்தப் பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.