முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற தவெக, காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 9 ஜூலை 2026, 5:47 am IST
ராமநாதபுரம் தனியாா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற தவெக, காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் தனியாா் அரங்கில் மாவட்டத் தலைவா் ராஜாராம் பண்டியன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தாா்.

இதில், மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ராமலட்சுமி, ஆனந்த குமாா், சோபா ரங்கநாதன், ஜோதி பாலன், ஆலம், அஜிஸ், வேலுச்சாமி, வட்டாரத் தலைவா்கள் காருகுடி சேகா், சேது பாண்டின், கிருஷ்ணமூா்த்தி, ஆதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், வருகிற உள்ளாட்சித் தோ்தல்களில் தவெக, காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றி கூட்டணி நிா்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments