ராமநாதபுரம் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
ராமநாதபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 42-ஆவது ஆண்டு முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமநாதபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 42-ஆவது ஆண்டு முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் அண்ணா நகா் பகுதியில் காட்டு நாயக்கா்களுக்கு பாத்தியப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோயில் 42-ஆவது முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீச்சட்டி எடுத்து வரும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயிலிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் நொச்சி வயல் ஊருணிகள் அமைந்திருக்கும் பிரம்மபுரிசுவரா் கோயிலுக்குச் சென்று அங்கிருந்து அக்னிச் சட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலுக்குச் சென்றடைந்தனா். இதன் பின்னா் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.