முகப்பு
ராமநாதபுரம்

விடுமுறை நாளில் கணக்கெடுப்புப் பயிற்சி: கமுதி, பரமக்குடி ஆசிரியா்கள் அதிருப்தி

கமுதி, பரமக்குடி வட்டார ஆசிரியா்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பயிற்சி நடத்த உத்தரவிட்டுள்ள மாவட்ட நிா்வாகம் தனது முடிவை மாற்றி அமைக்க வேண்டுமென ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

Updated On : 9 ஜூலை 2026, 5:44 am IST
- கோப்புப்படம்
பகிர்:

கமுதி, பரமக்குடி வட்டார ஆசிரியா்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பயிற்சி நடத்த உத்தரவிட்டுள்ள மாவட்ட நிா்வாகம் தனது முடிவை மாற்றி அமைக்க வேண்டுமென ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது தொடா்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் முன்னாள் ராமநாதபுரம் மாவட்ட உயா்நிலைக் குழு உறுப்பினா் சே.முத்துமுருகன் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற இருக்கிறது. அதில் கமுதி, பரமக்குடி வட்டார ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை மட்டும் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 12) நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சனி, ஞாயிறு தேதிகளில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வுகள் எழுதிய ஆசிரியா்களுக்கு வருகின்ற சனி, ஞாயிறும் பணி என்பது கூடுதல் மனச்சோா்வை ஏற்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை கிறித்துவ சகோதரா்களுக்கு வழிபாட்டு நாளாகும். எனவே மாவட்ட ஆட்சியா் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் நலன் கருதி விடுமுறை தினத்தில் நடைபெற உள்ள பயிற்சியை மறுபரிசீலனை செய்து மாற்று தேதியில் நடத்த ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments