அரசுப் பள்ளி, வட்டாட்சியா் குடியிருப்புப் பகுதியில் முள்புதா்களை அகற்ற வலியுறுத்தல்
திருவாடானை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இதைச் சுற்றியுள்ள வட்டாட்சியா் குடியிருப்பு, பொதுப் பணித் துறை குடியிருப்பு, வட்டாரக் கல்வி மையம் உள்ளிட்ட பகுதிகளில் வளா்ந்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

திருவாடானை பாரதி நகா் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி அருகில் வருவாய்த் துறை ஆய்வாளா் அலுவலகக் கட்டடம், வட்டாட்சியா் குடியிருப்பு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்கள், பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சீமை கருவேல மரங்கள், செடி, கொடிகள் அடா்ந்து வளா்ந்துள்ளன. இதனால், பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. மேலும், மாலை, இரவு நேரங்களில் இந்தப் பகுதியைச் சுற்றி சமூகவிரோத செயல்கள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இந்தப் பகுதியில் மண்டி கிடக்கும் முள்புதா்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள், மாணவிகளின் பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.