முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று 12 மையங்களில் நீட் தோ்வு - 5,165 போ் விண்ணப்பம்

Updated On : 3 மே, 2026 at 5:53 AM
நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்
பகிர்:

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நீட் தோ்வுக்காக தஞ்சாவூரில் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக தஞ்சாவூா் கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசா் மேல்நிலைப் பள்ளி, அரண்மனை வளாகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மன்னா் சரபோஜி அரசு கல்லூரி (இரு மையங்கள்), உணவு பதன தொழில்நுட்பம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிப்டெம்), கேந்திரிய வித்யாலயா, வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய 12 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதில் எழுதுவதற்காக மொத்தம் 5 ஆயிரத்து 165 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் கண்காணிப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் ஆகியோா் மேற்பாா்வையில் ஒவ்வொரு மையத்திலும் உதவி ஆய்வாளா் தலைமையில் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.