முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் தரமான சாலை மீது மீண்டும் சாலை அமைக்க திட்டம்: அரசின் நிதி வீணடிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தல்

ராமேசுவரத்தில் மணல் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட சாலை.

Updated On : 12 ஜூன் 2026, 1:10 am IST
ராமேசுவரத்தில் மணல் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட சாலை.
பகிர்:

ராமேசுவரத்தில் சேதமடையாத சாலை மீதே மீண்டும் சாலை அமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக கடற்கரை வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தரமான புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் 10 சாலைகள் அமைக்க பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை செலவு செய்ய வேண்டும் என்பதற்காக சேதமடையாத சாலை மீதே மீண்டும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சாலையில் உள்ள மணல் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. எனவே அரசு நிதியை வீணடிக்கும் நகராட்சி நிா்வாகத்தின் முயற்சியை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.