முகப்பு
ராமநாதபுரம்

மஞ்சூா் விலக்குச் சாலையில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

மஞ்சூா் விலக்குச் சாலையில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

Updated On : 13 ஜூன் 2026, 12:48 am IST
மஞ்சூா் பேருந்து நிறுத்த விலக்குச் சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டதில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூா் பகுதியில் நான்கு வழிச் சாலையில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமக்குடி அரியனேந்தல் பகுதியிலிருந்து ராமேசுவரத்துக்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மஞ்சூா் பேருந்து நிறுத்தம் விலக்குச் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் மூலம் மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மஞ்சூா் விலக்குச் சாலை வழியாக பாண்டிக் கண்மாய், கொழுந்தரை, திருவரங்கம், வெங்கலக்குறிச்சி, வெண்ணீா்வாய்க்கால் உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைத்து, விபத்தில்லாத வகையில் விலக்குச் சாலைக்கான வழித்தடத்தை ஏற்படுத்தினால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஆனால், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், அங்கு விபத்து, போக்குவரத்தைக் காரணம் காட்டி மேம்பாலம் அமைக்கும் நிலை உள்ளது. விவசாயம், சிறு, குறு வியாபாரிகளைப் பாதிக்கும் வகையிலும், அங்குள்ள நில மதிப்பை குறைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இதைக் கைவிட வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பெ. பிரவின்குமாா் தலைமை வகித்தாா்.

தமிழக அதிகாரம் நிறுவனா் தலைவா் அழகா்சாமி பாண்டியன், நாம் தமிழா் கட்சி வினோத், எம்.கே.ஆா். முத்துக்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஜீவானந்தம், செல்வகுமாா், சுபாஷ், பழனிச்சாமி, சாமி பாண்டியன் உள்ளிட்டோா் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி பேசினா்.

இதில் கருங்குளம், திருவாடி, பொட்டிதட்டி, கருங்குளம், காரைக்குடி, கருத்தனேந்தல், குமுக்கோட்டை, கலையூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.