முகப்பு
ராமநாதபுரம்

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

Updated On : 13 ஜூன் 2026, 12:02 am IST
கைது செய்யப்பட்ட ராஜ்குமாா்.
பகிர்:

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் ஆா்.எஸ். மடை பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இவரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜீ. சந்தீஷ், மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரனிடம் பரிந்துரை செய்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.