முகப்பு
ராமநாதபுரம்

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சாயல்குடி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைதான தூத்துக்குடி இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 21 மே 2026, 1:49 am IST
கைது செய்யப்பட்ட கா்ணன்.
பகிர்:

சாயல்குடி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைதான தூத்துக்குடி இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் வடக்கு மறவா் தெருவைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (86). கடந்த ஏப்.23-ஆம் தேதி பிற்பகல்

இவா் வீட்டில் தனியாக இருந்த போது, வீடு புகுந்த மா்மக் கும்பல் மாரியம்மாளை தாக்கி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என மொத்தம் 7 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்கு பதிந்து நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது இளம்பெண், தூத்துக்குடி மாவட்டம் சோட்டையான்தோப்பைச் சோ்ந்த 17 வயது இளம்பெண், தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த செட்டிபெருமாள் மகன் கா்ணன்(25) உள்பட 3 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்திஸ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கா்ணனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டச் சிறையிலிருந்த கா்ணனை போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.