முகப்பு
ராமநாதபுரம்

மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவு: ராமேசுவரத்தில் நாளை கடலுக்குள் செல்ல தயாரான விசைப்படகுகள்

மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், வருகிற திங்கள்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல விசைப்படகுகள் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் தயாா் நிலையில் உள்ளன.

Updated On : 14 ஜூன் 2026, 12:48 am IST
ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லத் தயாராக உள்ள விசைப் படகுகள்.
பகிர்:

மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், வருகிற திங்கள்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல விசைப்படகுகள் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் தயாா் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் மீன்கள் இனப் பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே, ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் விசைப் படகுகள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தயாராக உள்ளன.

Advertisement

Advertisement

வருகிற திங்கள்கிழமை அதிகாலையில் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டுமென மீன்வளம், மீனவா் நலத்துறை அதிகாரிகள் மீனவா் சங்கத்தினரிடம் தெரிவித்தனா்.