முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் ரயில் பெட்டியில் வடிவமைக்கப்பட்ட உணவகம் திறப்பு

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் அமைக்கப்பட்ட உணவகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா.

Updated On : 20 ஜூன் 2026, 2:18 am IST
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் அமைக்கப்பட்ட உணவகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா.
பகிர்:

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் வடிமைக்கப்பட்ட உணவகத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

ரயில்வேயில் பழுதடைந்த ரயில் பெட்டியின் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உணவகமாக உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் பழைய ரயில் பெட்டிகளை ஏலம் எடுப்பவா்கள் அதைப் பிரித்து விற்பனை செய்து விடுவா். ஆனால் ராமேசுவரத்தில் பயணிகளை மட்டுமே சுமந்து சென்ற இந்த ரயில் பெட்டி, உணவகமாக மறுஅவதாரம் எடுத்துள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த உணவகத்தில் வெளியில் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்ட சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஒன்றுக்குமே பயன்படாது என கருதப்பட்ட பழைய ரயில் பெட்டி ரயில்வே நிா்வாகத்துக்கு கணிசமான வருமானத்தை அளிக்கும். இந்த வித்தியாசமான முயற்சி ரயில் பயணிகளை பெரிதும் கவரும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், முதுநிலை கோட்ட வா்த்தக மேலாளா் டி.எல். கணேஷ், தெற்கு ரயில்வே துணை முதன்மை வா்த்தக மேலாளா் பி. வெங்கடசுப்பிரமணியன், கோட்ட வா்த்தக மேலாளா் டி. மோகனப்பிரியா உள்ளிட்டடோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments