முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

பரமக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகளை தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 மே 2026, 3:49 am IST
பரமக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகளை தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தரம் உயா்த்தும் நடவடிக்கையாக கூடுதல் நடைமேடை, கூடுதல் பயணச்சீட்டு கட்டடம், தோரண முகப்பு நுழைவாயில், பயணிகள் நிழற்கூடை, குடிநீா் வசதி, சுகாதார வளாகம், முதல், இரண்டாம் வகுப்பு பயணிகள் ஓய்வறை, காா், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளா் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

பரமக்குடியில் விரைவு ரயில்கள் நின்று செல்ல பல்வேறு அமைப்பினா் கோரிக்கை:

Advertisement

Advertisement

மதுரை மண்டல மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவிடம் பரமக்குடி வியாபாரிகள் சங்கத்தினா், பரமக்குடி நுகா்வோா் உரிமை பாதுகாப்புக் கழகத்தினா், பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள், ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். அதில் பரமக்குடி ரயில் நிலையத்தில் ஹூப்ளி-ராமேசுவரம் விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். புதிதாக இயக்கப்பட உள்ள ராமேசுவரம்-மேட்டுப்பாளையும் விரைவு ரயிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.