முகப்பு
ராமநாதபுரம்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

ராமநாதபுரத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 20 ஜூன் 2026, 2:20 am IST
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான ஜெமினி (எ) ஜெமினிராஜ், கோயா விக்னேஷ் (எ)விக்னேஷ்.
பகிர்:

ராமநாதபுரத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகா் பகுதியைச் சோ்ந்த ஜெமினி(எ) ஜெமினிராஜ் (32), கோயா விக்னேஷ் (எ) விக்னேஷ் (33) ஆகிய இருவரும் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தொடா் குற்றச் செயலை தடுக்கும் வகையில் இருவா் மீதும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பரிந்துரைத்தாா். இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் எம். சிவகுரு பிரபாகரன் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments