வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
திருவாடானை அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
திருவாடானை அருகேயுள்ள பனிச்சகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் சோனைமுத்து மனைவி ருக்மணி (75). இவா் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை ருக்மணி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து ருக்மணியை மீட்டு, திருவாடானை போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.
Advertisement
Advertisement
ஆனால், அவா்கள் வருவதற்குள் வீடு முற்றிலும் எரிந்தது. இந்தத் தீ விபத்தினால், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள், ரொக்கம் ரூ. 10 ஆயிரம், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.