முகப்பு
அரியலூர்

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

Updated On : 28 ஏப்ரல் 2026, 1:23 am IST
தீப்பிடித்து எரிந்து சரக்கு ஆட்டோ. - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததில், ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமாகின.

ஆன்லைன் மூலம் வாடிக்கையாளா்கள் பதிவு செய்திருந்த வாசிங்மிசின், பிரிட்ஜ் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு பெரம்பலூரிலிருந்து சுமை ஆட்டோ ஒன்று அரியலூா் மாவட்டம் ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தது.

ஆண்டிமடம் அடுத்த இடையக்குறிச்சி அருகே சென்றபோது, எஞ்சின் பகுதியிலிருந்து புகை வந்ததையடுத்து வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் கீழே இறங்கினாா். சிறிது நேரத்தில் வாகனம் தீப்பற்றி கிடுகிடுவென எரிய ஆரம்பித்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆண்டிமடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் வாகனம் மற்றும் வாகனத்தில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சாம்பலாகின. சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments