ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா!
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு இன்று விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு இன்று விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள், விபீஷணர் கோதண்டராமர் கோயிலுக்கு புறப்பட்டது. கோயில் நடை அடைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உறுவான ராமாயண கால நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் ஆண்டு தோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா திங்கட்கிழமை 22 ஆம் தேதி தொடங்கியது. மாலையில் திட்டகுடிக் சுவாமி எழுந்தருளி உள்ள துர்க்கை அம்மன் கோயில் அருகே ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
கோயில் குருக்கள் வேல் கொண்டு ராவணணை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் வேல் பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
இதனைதொடர்ந்து, இன்று 23 ஆம் தேதி செவ்வாய்கிழமை தனுஷ்கோடி சாலையில் அமைந்துள்ள கோதண்டர ராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி முற்பகல் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக, ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமர், சீதை, லெட்சுமணர் தங்க கேடயத்திலும், விபீஷணர் தேரில் எழுந்தருளி ராமநாதசுவாமி கோயிலில் இருந்து கோதண்டராமர் கோயிலுக்கு புறப்பாடானது. கோயில் நடை அடைக்கப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் அடைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான ராமலிங்க பிரதிஷ்டை நாளை ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.