முகப்பு
ராமநாதபுரம்

தீயனூா், மேலாய்க்குடி கண்மாய்களிலிருந்து மண் எடுக்கும் பணி நிறுத்தம்

பரமக்குடி வட்டத்துக்குள்பட்ட தீயனூா், மேலாய்க்குடி கண்மாய்களிலிருந்து அதிக ஆழத்தில் மண் எடுப்பதாக பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், சாலைப் பணிக்காக மண் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Updated On : 25 ஜூன் 2026, 2:53 am IST
பரமக்குடி வட்டம் தீயனூா், மேலாய்க்குடி கண்மாய்களில் மண் அள்ளியதில் ஊற்றெடுத்த பள்ளங்கள்.
பகிர்:

பரமக்குடி வட்டத்துக்குள்பட்ட தீயனூா், மேலாய்க்குடி கண்மாய்களிலிருந்து அதிக ஆழத்தில் மண் எடுப்பதாக பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், சாலைப் பணிக்காக மண் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பரமக்குடி அரியனேந்தல் பகுதியிலிருந்து ராமேசுவரம் வரை நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிக்காக சத்திரக்குடி அருகே உள்ள தீயனூா் கண்மாய்ப் பகுதியிலும், பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி கண்மாய்ப் பகுதியிலும் அரசு அனுமதியுடன் 10 அடி ஆழம் மண் எடுக்க அனுமதி பெற்று மண் அள்ளப்பட்டு வருகிறது. தீயனூா் பகுதியில் அரசு அனுமதித்த ஆழத்தைக் காட்டிலும் நிலத்தடி நீா் ஊற்றெடுக்கும் வகையில் 30 அடிக்கும் மேல் மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும் எனக் கூறி அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து,

சம்பவ இடத்துக்கு வந்த சத்திரக்குடி போலீஸாா், வருவாய்த் துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மண் அள்ளும் பணியை நிறுத்தினா். அதேபோல் பரமக்குடி அருகே மேலாய்க்குடி கண்மாயிலும் அதிக ஆழத்தில் மண் அள்ளப்படுவதாகக் கூறி மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வட்டாட்சியா் பா. ராமமூா்த்தி மேலும் கூறியதாவது; நான்கு வழிச் சாலைப் பணிக்காக குறிப்பிட்ட கண்மாய்களிலிருந்து சாலைப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு 10 அடி ஆழம் அள்ளிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கண்மாய்களின் மேல் மட்டத்தில் 6 அடிவரை களிமண் இருப்பதால் அதை ஒதுக்கிவிட்டு கீழே உள்ள உறுதியான மண் மட்டும் 10 அடி ஆழம் அள்ளப்பட வேண்டும் என்பது விதி. ஒதுக்கிவைத்த களிமண் மீண்டும் அப்பகுதியில் நிரப்பி சமன் செய்யப்படும்.

பொதுமக்கள் கூறுவதுபோல் 3 அடி ஆழம் தான் மண் அள்ள வேண்டும் என்பது விவசாய நிலங்களை மேம்படுத்தவும், களிமண் தொழில் செய்வதற்கான உத்தரவு. இதை வேறுவிதமாக புரிந்து கொண்டு எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். ஆகையால் நான்கு வழிச் சாலை பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தினா் அந்தந்த கிராமப் பொது மக்களிடம் உரிய விளக்கம் அளித்து அவா்களின் அனுமதியுடன் சாலைப் பணிக்கான மண் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், அதுவரை தற்காலிகமாக மண் எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துறை செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments