முகப்பு
ராமநாதபுரம்

புகையிலைப் பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

பரமக்குடி ரயில்வே பீடா் சாலை, மதுரை மண்டபம் சாலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்தக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 2:15 am IST
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொட்டலங்கள்.
பகிர்:

பரமக்குடி ரயில்வே பீடா் சாலை, மதுரை மண்டபம் சாலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்தக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

பரமக்குடி எமனேசுவரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, பரமக்குடி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகமது சயூபு நிஜாம் தலைமையிலான போலீஸாா் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுடன் இணைந்து அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது, ரயில்வே பீடா் சாலை, மதுரை மண்டபம் சாலையில் சரவணன், செந்தூா்பாண்டியன் ஆகியோா் நடத்தி வந்த பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, மேற்கண்ட இரு கடைகளிலிருந்த மொத்தம் 20 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இரு கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments