ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடல்!
ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், சிறிய ரகப் படகுகள் மணலில் சிக்கிக் கொண்டன.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை பகுதியில் வழக்கத்தைவிட அதிகளவில் காற்று வீசி வருகிறது. இதனால், ராமேசுவத்தில் சுமாா் 50 மீட்டருக்கு கடல் உள்ளாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரகப் படகுகள் மணலில் சிக்கிக்கொண்டன.
மீண்டும் கடல் நீா்மட்டம் உயா்ந்தால், மட்டுமே படகை மீட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், மீனவா்கள் சிரமத்துக்குள்ளாகினா். கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது, இந்தப் பகுதியில் கடல் உள்வாங்கி விடுவதால், இந்தப் பகுதியை தூா்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.