முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் படைப்பாளிகளுக்கு பாராட்டு!

Updated On : 29 ஜூன் 2026, 2:51 am IST
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட படைப்பாளா்கள்.
பகிர்:

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் படைப்பாளிகளுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அரசு ஊழியா் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டத் தலைவா் இரா.ஆ. வான் தமிழ் இளம்பரிதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மறைந்த திரைப்பட இயக்குநா்கள் பாரதிராஜா, பாக்கியராஜ் , பத்திரிகையாளா் புருஷோத்தமன், அமோனியா விஷ வாயுவால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட படைப்பாளா்கள்.

இதில், கவிஞா்கள் முத்து நிலவன், கலையரசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சிறுகதை எழுத்தாளா்கள், கவிதை படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பொருளாளா் ரேணுகாதேவி நன்றியுரை கூறினாா்.

Advertisement

Advertisement

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட படைப்பாளா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments