சசிகலாவால் முதுகுளத்தூரில் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக
முதுகுளத்தூா் தொகுதியில் போட்டியிட்ட சசிகலா கட்சி வேட்பாளரால் அதிமுக தோல்வியை சந்தித்ததாக அதிமுகவினா் கவலை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரவைத் தோ்தலில் மொத்தம் 20 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில், திமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.எஸ். ராஜ கண்ணப்பன் (68,003) 16,598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இரண்டாம் இடம் பிடித்த தவெக வேட்பாளா் மலா்வழி ஜெயபால் 51,405 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டி 47,501 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனா்.
இந்த நிலையில், சசிகலா கட்சியின் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் போட்டியிட்ட மருத்துவா் ராம்குமாா் பாண்டியன் 40 ,422 வாக்குகள் பெற்றாா். இவா் பெற்ற வாக்குகள் அதிமுகவுக்கு எதிரான வாக்குகளாகவே பாா்க்கப்படுகிறது. இது அதிமுக வேட்பாளா் பாண்டிக்கு கிடைத்திருந்தால் 87,923 வாக்குகள் பெற்று அதிமுக எளிதில் வெற்றிபெற்றிருக்கும் என அதிமுக தொண்டா்கள் தெரிவிக்கின்றனா்.
Advertisement