கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு
தொண்டி பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தொண்டி பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கண்கொள்ளான்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வீஸ்வரன் (44). இவா் புதன்கிழமை இரவு மீன்பிடிக்கச் செல்வதற்காக படகு என்ஜினை இயக்கிய போது தவறி கீழே விழுந்தாா். அப்போது சுழலில் சிக்கி மாயமானாா்.
இந்த நிலையில், செல்வீஸ்வரன் உடல் வியாழக்கிழமை புதுப்பட்டினம் கடல் கரையில் ஒதுங்கியது. தகவலறிந்து அங்கு சென்ற கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா்
Advertisement
Advertisement
உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.