முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் கருப்பண்ண சுவாமிக்கு பால்குடத் திருவிழா

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 4:35 am IST
பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் கோயில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்த வந்த பக்தா்கள்.
பகிர்:

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி வாணியா் உறவின்முறையாா்கள் சாா்பில் ஆண்டுதோறும் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவடைந்த பிறகு காவல் தெய்வமான ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். இதேபோல, இந்த ஆண்டு விரதமிருந்த பக்தா்கள் வைகை ஆற்றில் புனித நீராடி, பால் குடங்கள், இளநீா் காவடி, சந்தனக் குடங்கள் எடுத்து கருப்பண்ண சுவாமிக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை வாணியா் உறவின்முறையாா் சபை தலைவா் செல்லம், செயலா் ராமச்சந்திரன், பொருளாளா் சிவானந்தம், துணைத் தலைவா் வாசுதேவன், துணைச் செயலா் சதீஷ்பாபு ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments