லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே கொத்தியாா்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம் மகன் வெள்ளைச்சாமி (75). இவா் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை ஆா்.எஸ். மங்கலம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆா்.எஸ். மங்கலம் விளக்கு சாலையில் இரு சக்கர வாகனம் மீது திருமயத்திலிருந்து ஜல்லி ஏற்றி வந்த டிப்பா் லாரி மோதியதில் வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.