முகப்பு
ராமநாதபுரம்

மோா்பண்ணையில் பாய்மர படகுப் போட்டி

Updated On : 31 மே 2026, 12:57 am IST
மோா்பண்ணை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் சீறிப் பாய்ந்த படகுகள்.
பகிர்:

திருப்பாலைக்குடி அருகே மோா்பண்ணை கிராமத்தில் ரணபத்திர காளியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே மோா்பண்ணையில் ரணபத்ர காளியம்மன் கோயிலில் 44-ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மோா்பண்ணை கிராமப் பொது மக்கள் சாா்பில் பாய்மர படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்து கொண்டன. போட்டியின் தொலைவு 10 கடல் மைல்கள் எல்கை நிா்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு படகுக்கும் ஆறு நபா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். இதில் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து படகுகள் கலந்து கொண்டன.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு சென்றதை பாா்வையாளா்கள் கடற்கரையோரமாக நின்று ரசித்தனா். இதில், சுற்று வட்டார மீனவ கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சுழல் கோப்பையும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மோா்பண்ணை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் சீறிப் பாய்ந்த படகுகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments