ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
உயர் கல்வி பெறுவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்று நோக்கில் ஏனைய சமுதாய மாணவ,
உயர் கல்வி பெறுவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்று நோக்கில் ஏனைய சமுதாய மாணவ, மாணவியர்களைப் போன்று ஆதி திராவிட மாணவ, மாணவியர்களும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு 10-ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இத் திட்டத்தின் கீழ் கற்பிப்பு கட்டணம் உள்பட கட்டாய திருப்பிச் செலுத்தப்படாத கட்டணங்கள் பராமரிப்புப் படி போன்றவை அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறையால் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமலும், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இத் திட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கற்பிப்புக் கட்டணம் உள்பட அனைத்தும் அரசால் அவர்கள் பயின்று வரும் கல்லூரிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.
பராமரிப்புப் படி தகுதியள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கில் அரசால் மின்னணுத் தீர்வை முறை மூலம் செலுத்தப்படுகிறது.
மேலும், பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், ஆசிரியர் கல்வி பயிற்சிப் படிப்புகள் என சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள அனைத்து ஆதி திராவிட பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டாய திருப்பி செலுத்தப்படாத கட்டணங்கள் மட்டும் அரசால் கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது. இக் கல்லூரிகளில் பயிலும் தகுதி யுள்ள மாணவர்களுக்கு பராமரிப்புப் படி அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
அதேபோன்று சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர் களுக்கும் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து சுயநிதி கல்லூரிகளும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணங்கள், சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணங்கள் போன்றவற்றை தகுதியுள்ள மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்று அரசால் அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், இது தொடர்புடைய அனைத்துக் கல்லூரிகளும் மாணவர்களிட மிருந்து தேவையான விவரங்களைப் பெற்று ஜ்ஜ்ஜ்.ங்ள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய மூலம் விண்ணப்பித்து மாணாக்கர்கள் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கல்விக் கட்ட ணத்தை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது சேர்க்கை நேரம் என்பதால், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறை திட்டத்தில் மாணவ, மாணவியர் பயன்பெற வழிவகை செய்துள்ளது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரையும், தொடர்புடைய கல்வி நிறுவனங்களையும் அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.