வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இளையான்குடி அருகேயுள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பவள்ளி. இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
புதன்கிழமை காலை வீட்டுக்கு திரும்பி வந்த புஷ்பவள்ளி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இச் சம்பவம் குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புஷ்பவள்ளி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.