முகப்பு
சிவகங்கை

தேசிய மகளிா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி: 6- ஆவது சுற்றில் 2 மாணவிகள் முன்னிலை

தேசிய மகளிா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது சுற்றின் முடிவில் 2 மாணவிகள் முன்னிலையிலும், 8 மாணவிகள் இரண்டாமிடமும் பெற்றனா்.

Updated On : 9 அக்டோபர் 2024, 12:25 am IST
பகிர்:

தேசிய மகளிா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது சுற்றின் முடிவில் 2 மாணவிகள் முன்னிலையிலும், 8 மாணவிகள் இரண்டாமிடமும் பெற்றனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தேசிய மகளிா் சதுரங்கப் போட்டிகள் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிகள் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இ வருகிற 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியின் 6-வது சுற்றின் முடிவில் தலா 5.5 புள்ளிகளுடன் வேல்புலா சரயு, பத்மினி ரவுட் ஆகிய 2 மாணவிகள் முன்னிலை பெற்றனா்.

Advertisement

Advertisement

மேலும் நந்திதா, நிஷா மொஹோடா, ரஷித்தா ரவி, பிரியங்கா நுதாக்கி, பிரியங்கா, சரண்யா, வா்ஷினி, சாஷி சிட்லாங்கே ஆகிய 8 மாணவிகள் தலா 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பெற்றனா்.

போட்டியின் 7-ஆவது சுற்று போட்டிகள் புதன்கிழமை (அக். 9) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.