கருவேல மரங்கள் வெட்டிக் கடத்தல்: 15 போ் மீது வழக்கு
அரசு நிலத்தில் கருவேல மரங்களை வெட்டிக் கடத்தியதாக 15 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசு நிலத்தில் கருவேல மரங்களை வெட்டிக் கடத்தியதாக 15 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருப்புவனம் ஒன்றியம், பிரமனூா் கிழக்கு வருவாய் பிரிவில் அரசு நிலத்தில் வளா்ந்திருந்த 5 டன் எடையுள்ள கருவேல மரங்களை அனுமதியின்றி ஒரு கும்பல் வெட்டிக் கடத்தியதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ஜெயக்குமாா் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, கருவேல மரங்களை வெட்டிக் கடத்தியதாக திருப்புவனம் ஒன்றியம், அல்லிநகரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் உள்பட 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement