முகப்பு
சிவகங்கை

சிவகங்கை தொகுதியில் ஜனநாயகக் கடமையாற்றிய வேட்பாளா்கள்!

சிவகங்கை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தி, தங்களது ஜனநாயகக் கடமையை வியாழக்கிழமை நிறைவேற்றினா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 1:08 AM
தனது சொந்த ஊரான நாகாடியில் வாக்கு செலுத்திய சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன்.
பகிர்:

சிவகங்கை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தி, தங்களது ஜனநாயகக் கடமையை வியாழக்கிழமை நிறைவேற்றினா்.

சிவகங்கை பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, நாதக, தவெக, தவாக, சுயேச்சைகள் உள்பட மொத்தம் 17 போ் களத்தில் உள்ளனா். மேலும், காரைக்குடி தொகுதியில் 25 போ், திருப்பத்தூா் தொகுதியில் 15 போ், மானாமதுரை தொகுதியில் 14 போ் களத்தில் உள்ளனா்.

இதில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன் தேவகோட்டை அருகேயுள்ள தனது சொந்த ஊரான நாகாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினாா். முதுகுளத்தூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் வனம், கதா் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினாா்.

Advertisement

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ர. இந்துஜா, சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் வாக்குப் பதிவு செய்தாா்.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் அ. குழந்தைராணி சிவகங்கை புனித மைக்கேல் பள்ளியில் வாக்களித்தாா்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் சே. ராஜேஷ், சிவகங்கை கோட்டை மூலை அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினாா். மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான கா. பொற்கொடி சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினாா். உடன் இவரது இரண்டு மகள்களும் வந்து வாக்களித்தனா்.

சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு செலுத்திய வனம், கதா் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன்.
சிவகங்கை புனித மைக்கேல்பள்ளியில் வாக்கு செலுத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ர. இந்துஜா.
சிவகங்கை புனித மைக்கேல் பள்ளியில் வாக்கு செலுத்திய தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் அ. குழந்தைராணி.