முகப்பு
சிவகங்கை

ஆதினமிளகி அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழா

திருப்பத்தூா் தென்மாபட்டியில் அமைந்துள்ள ஆதினமிளகி அய்யனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூலை 2026, 12:07 am IST
திருப்பத்தூா் தென்மாபட்டு ஆதினமிளகி அய்யனாா் கோயிலுக்கு சனிக்கிழமை புறப்பட்ட புரவி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டியில் அமைந்துள்ள ஆதினமிளகி அய்யனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மாதம் 19-ஆம் தேதி பிடிமண் கொடுக்கப்பட்டு புரவி எடுப்புத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, 26-ஆம் தேதி கோயில் முன் சேங்கை வெட்டுதல் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை கிராம மக்கள் ஒன்று கூடி சின்னையா கோயிலிலிருந்து சுவாமி அழைத்துக் கொண்டு, கண்டரமாணிக்கம் சாலை, பூமாயி அம்மன் கோயில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு வழியாக புதுப்பட்டியில் உள்ள புரவி பொட்டலுக்குச் சென்றனா்.

பின்னா், அங்கிருந்த புரவிகளை இரவு சாமி ஆட்டத்துடன் ஊா்வலமாக சுமந்து வந்து, தென்மாபட்டு புரவி பொட்டலில் சோ்த்தனா். வழி நெடுகிலும் திரளான பக்தா்கள் புரவிகளுக்கு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

Advertisement

Advertisement

சனிக்கிழமை மாலை சின்னையா கோயிலிலிருந்து சுவாமி அழைக்கப்பட்டு சாமியாடிகள் புறப்பட்டு வந்தனா்.

பின்னா், தென்மாப்பட்டு பொட்டலில் உள்ள புரவிகளை ஆதீனமிளகி அய்யனாா், கிருஷ்ணப்ப அய்யனாா், வாணியம்பட்டி அய்யனாா் கோயில்களுக்கு கொண்டு சென்றனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மாட்டுவண்டிப் போட்டி: ஆதினமிளகி அய்யனாா் கோயில் புரவியெடுப்புத் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 இணைகளும், சின்ன மாடு பிரிவில் 16 இணைகளும் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் சிவகங்கை மதுரை தேனி திண்டுக்கல் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. திருப்பத்தூா் சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளா்களுக்கும், இதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழாக் குழுவினா் சாா்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments