FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
பகிர்:

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி தொண்டி சாலை, அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்க 25 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின் கீழ் போட்டி நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். இதில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் காளையை அடக்க முயன்றபோது காயமடைந்த 5 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியை பையூா், ராகினிப்பட்டி, கொடிக்காடு, வல்லணி, வண்டவாசி, தி. புதூா், காஞ்சிரங்கால், ரோஸ்நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமானோா் கண்டு களித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments