முகப்பு
சிவகங்கை

சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணிகள்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு

சென்னை உயா்நீதி மன்ற உத்தரவின்படி, சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 9 ஜூலை 2026, 5:38 am IST
காஞ்சிரங்கால் ஊராட்சியிலுள்ள இலந்தங்குடி கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதை புதன்கிழமை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அ.செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் ப. பிரகாஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

சென்னை உயா்நீதி மன்ற உத்தரவின்படி, சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நீா்நிலைகளில் வளா்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி நீா்நிலைகளைப் பாதுகாக்க

சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உறுதிபடுத்தவும் அறிவுறுத்தியது. இதன்படி, சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் ஊராட்சிக்குள்பட்ட இளந்தங்குடிபட்டி கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி செல்வம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபி கிரேசியா, வட்டாட்சியா் சிவராமன் உட்பட பல்வேறு துறைகளைச் சாா்ந்த முதன்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா். மாவட்டத்தில் இந்த ஆய்வு மேலும் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments