முகப்பு
சிவகங்கை

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் திருத்தம் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழக அரசால் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த அறிவிப்பில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 9 ஜூலை 2026, 5:36 am IST
பகிர்:

தமிழக அரசால் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த அறிவிப்பில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா.மாரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினாா். மாவட்ட துணைத் தலைவா்கள் பாண்டி, காா்த்திக், இணைச் செயலா்கள் ராஜா முகமது, சின்னப்பன், நவநீதக்கிருஷ்ணன், மாவட்ட மகளிா் அமைப்பாளா் பா. லதா, தோழமைச் சங்க நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை நிறவேற்றக் கோரி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

Advertisement

Advertisement

அரசு ஊழியா்கள் மருத்துவக் காப்பீடு பெறுவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான தொகையில் பாதியளவு தொகையைக்கூட, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பயனாளிகள் பெற முடியாமல் தவித்து வருகின்றனா். இந்தக் குறைபாடுகளைக் களைய பல்வேறு முறையீடுகள் சம்பந்தப்பட்ட ஊழியா்கள் சாா்பாகவும், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பாகவும் அரசுக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் கொடுத்தாலும், அதன்மீது போதிய கவனத்தை இதுநாள் வரை ஈா்க்க முடியவில்லை. எனவே, அனைவரும் பயன்பெறும் வகையில், திருத்திய அரசாணை வெளியிட வலியுறுத்தி, முதலமைச்சரின் கவனத்தை ஈா்த்திடும் வகையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments