போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை புதன்கிழமை கைது செய்தனா்.
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் அருகேயுள்ள நங்கம்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (62). இவா் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில், காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியனைக் கைது செய்தனா். இவரை சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் போலீஸாா் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.