ஏரியூரில் மஞ்சுவிரட்டு: 20 போ் காயம்
சிங்கம்புணரி அருகேயுள்ள ஏரியூரில் முனி கோயில் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கண்மாய்ப் பகுதியில் அமைக்கப்பட்ட வாடிவாசலுக்கு ஏரியூா் முனி கோயில் காளை அழைத்து வரப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மதுரை, திண்டுக்கல், சிங்கம்புணரி, எஸ்.எஸ். கோட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமாா் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
Advertisement
Advertisement
இதில் மாடுகளைப் பிடிக்க முயன்ற 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவா்களுக்கு அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்தப் போட்டியை திரளானோா் பாா்வையிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.