முகப்பு
சிவகங்கை

எஸ்.எஸ்.கோட்டையில் மஞ்சுவிரட்டு

Updated On : 15 ஜூன் 2026, 2:40 am IST
எஸ். எஸ். கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.எஸ்.கோட்டையில் பெரிய படைத்தலைவி அம்மன் கருக்குமடை அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

கோயிலின் அருகே உள்ள கண்மாய்ப் பகுதியில் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி, சூரக்குடி, முறையூா், அய்யாபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

கிராமத்தின் சாா்பில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் சில்வா் அண்டா, வேட்டி துண்டுகள் வழங்கப்பட்டன. முதலாவதாக கோயில் காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டது. பிறகு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை இளைஞா்கள் போட்டி போட்டு பிடித்தனா்.

Advertisement

Advertisement

இதில் பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் ஓடின. காளைகள் முட்டியதில் 10 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதில் திரளான பாா்வையாளா்கள் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனா். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ். கோட்டை ஊா்ப் பொதுமக்கள் செய்தனா்.