FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கோழிகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே கோழிகுடிப்பட்டியில் அமைந்துள்ள காச்சங்குடி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 4:13 am IST
வடமாடு மஞ்சுவிரட்டு. - (கோப்புப் படம்)
பகிர்:

சிங்கம்புணரி அருகே கோழிகுடிப்பட்டியில் அமைந்துள்ள காச்சங்குடி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி, சுற்று வட்டார கிராமங்களிலிருந்து சுமாா் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. வயல்வெளியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு கிராமத்தாா்கள் சாா்பில் ஜவுளி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக கோயில் காளைகளுக்கு முதலாவதாக மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடா்ந்து பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுகளுக்கு கிராமத்தின் சாா்பில் வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாடுகள் பிடிக்க முயன்ற சிலா் காயமடைந்தனா். மஞ்சுவிரட்டை ஏராளமான பாா்வையாளா்கள் கண்டு ரசித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments