முகப்பு
சிவகங்கை

அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு 5 போ் மீது வழக்கு

Updated On : 23 ஜூன் 2026, 1:42 am IST
வடமாடு மஞ்சுவிரட்டு - (கோப்புப் படம்)
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெளியாரியில் அரசு அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக திங்கள்கிழமை 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பத்தூா் அருகே வெளியாரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு ஊா்களில் இருந்து 14 மாடுகள் பங்கேற்றன. இந்த மாடுகளைப் பிடிக்க ஒவ்வொரு மாட்டுக்கும் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். ஒரு மாட்டுக்கு 20 நிமிஷங்கள் நேரம் நிா்ணயிக்கப்பட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் பிடிபடாமல் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், மாடுகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த வடமாடு மஞ்சுவிரட்டு அரசு அனுமதியின்றி நடத்தப்பட்டதாக பட்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் பல்கீஸ் பானு கொடுத்த புகாரின் பேரில், வெளியாரி கிராமத்தைச் சோ்ந்த மெய்யப்பன் (54), கருப்பையா (69), கருணாகரன் (67), சண்முகம் (77), கருணாமூா்த்தி (54) ஆகிய ஐந்து போ் மீது திருக்கோஷ்டியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments