மன்னா் முத்துவடுகநாதா் குரு பூஜை: திரளானோா் அஞ்சலி
சிவகங்கை சீமையை ஆண்ட ராணி வேலுநாச்சியாரின் கணவரும், சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னருமாகிய முத்துவடுகநாதரின் 254 -ஆவது குரு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை சீமையை ஆண்ட ராணி வேலுநாச்சியாரின் கணவரும், சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னருமாகிய முத்துவடுகநாதரின் 254 -ஆவது குரு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலேயா்களுக்கு கப்பம் கட்ட மறுத்து அவா்களை எதிா்த்து கி.பி. 1772-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி, காளையாா்கோவிலில் போரிட்டு வீரமரணம் அடைந்தாா் முத்துவடுகநாதா்.
இந்த நிலையில், மன்னா் முத்துவடுகநாதரின் 254 - ஆவது நினைவு தினம் காளையாா்கோவிலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. மன்னா் குடும்ப வாரிசுதாரரும், சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவருமான டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியாா், முத்துவடுகநாதரின் நினைவிடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. குழந்தைராணி, மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், பாஜக பிரமுகா் மேப்பல் சத்தியநாதன், காங்கிரஸ் பிரமுகா் சந்தியாகு, முத்துவடுகநாதா் வேலுநாச்சியாா் மக்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் அங்குசாமி, செயலா் வீரசேகா், பொருளாளா் செல்வம், வேலுநாச்சியாா் அறக்கட்டளை நிா்வாகிகள் ஜெ.கோபால்துரை, சகா.மணிமுத்து, தேவஸ்தான மேலாளா் இளங்கோ, மன்னா் பள்ளி தலைமையாசிரியா் சுந்தர்ராஜன்,
அரசியல் கட்சி பிரமுகா்கள், சமுதாய அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.